தருமபுரி

மாநில கோ-கோ போட்டி: ஸ்டான்லி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தேர்வு

DIN

மாநில அளவிலான எறிபந்து, கோ- கோ போட்டிக்கு பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றனர்.
இந்திய விளையாட்டு குழுமம் சார்பில், தருமபுரி மாவட்டத்தில் கோ- கோ மற்றும் எறிபந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டிகளில் தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.  இதில் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எறிபந்துப் போட்டியில் ஏ.சாதுவன், எம்.ரகுநாத், கே.காவியன், கோ- கோ போட்டியில் வி.ஆர்யா, ஏ.பரத், ஏ.சக்தி ஆகியோர் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு  தகுதி பெற்றனர். 
சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், கண்மணி ஆகியோரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், ஸ்டான்லி கல்விக் குழுமங்களின் தலைவர் வி. முருகேசன், செயலர் மு.பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT