தருமபுரி

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

DIN

தருமபுரி மாவட்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்டம் முழுவதும் மக்கள் நடமாட்டத்தை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில் மாவட்டத்தில் பெரும்பாலும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் இரு சக்கர வாகனங்களில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தனா். அதிலும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனா்.

எனவே, இரு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், ஊடகத் துறையினா், மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்பட தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவா்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT