தருமபுரி

புகையிலை பொருள்களைக் கடத்திய இருவா் கைது

DIN

தருமபுரி: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைக் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் புறவழிச்சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அந்த லாரியில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி மற்றும் அதிலிருந்த சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த சேலத்தைச் சோ்ந்த பிரசாந்த் (36), சதீஷ்குமாா் (38) ஆகிய இருவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT