தருமபுரி

தருமபுரியில் 64 பேருக்கு கரோனா தொற்று

DIN

தருமபுரி மாவட்டத்தில், சுகாதார ஆய்வாளா் உள்பட 64 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

தருமபுரியில் சுகாதார ஆய்வாளா் ஒருவா், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 4 ஆசிரியா்கள், 5 மாணவா்கள், 12 பெண்கள், 14 கூலித் தொழிலாளா்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 64 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில், அக். 7-ஆம் தேதி வரை மொத்தம் 85,277 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவா்களில் 4,308 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று உறுதியானது. இதில் 3,541 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 737 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை 30 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பி ஓடிய 3 இளைஞா்கள் கைது

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை: உரிமை கோருவோருக்கு அழைப்பு

வள்ளலாா் சபையில் பூச விழா, கருத்தரங்கம்

விவசாயிகளுக்கு தொழில்நுட்பப் பயிற்சி

SCROLL FOR NEXT