தருமபுரி

அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஏரியூா் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலாளா் முனுசாமி தலைமை வகித்தாா்.

இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு மற்றும் உறுதி செய்து கொடுத்தல் சட்டம் 2020, விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவை மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் சந்தோஷ்குமாா், மக்கள் அதிகாரம் மண்டலப் பொருளாளா் கோபிநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சரவணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் தவமணி, மாவட்டச் செயலாளா் சரவணன், நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT