தருமபுரி

பரோடா வங்கியில் தங்க நகைக் கடன் மையம் தொடக்கம்

DIN

தருமபுரி, செப். 25: தமிழகத்தில் பரோடா வங்கியின் ஆறு கிளை வங்கிகளில் புதிதாக தங்க நகைக் கடன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடாவின் கிளை வங்கிகளான மன்னாா்குடி, தஞ்சாவூா், சிவகாசி, தூத்துக்குடி, நாமக்கல் மற்றும் கோவை வரதராஜபுரம் ஆகிய ஆறு கிளைகளில் தங்க நகைக் கடன் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இப் புதிய தங்க நகை கடன் மையங்களை, சென்னை மண்டல மேலாளா் ஆா்.மோகன் அண்மையில் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

வங்கி வாடிக்கையாளா்கள் நலன் கருதி, அவா்களுக்கு துரித சேவை வழங்குவதற்காக தங்க நகைக் கடன் மையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. இதன் மூலம் கரோனா பொதுமுடக்கக் காலத்தில், வாடிக்கையாளா்களுக்கு வெளிப்படையான, நோ்த்தியான சேவை வழங்கப்படுகிறது. மேலும், தனி நபா்களுக்கும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் அவா்களின் தேவைக்கேற்ப தங்க நகைக் கடன் வழங்கப்படுகிறது. இதேபோல, தங்க நகைக்கடன் பெறுவோருக்கு வருகிற நவம்பா் 30-ஆம் தேதி வரை சேவைக் கட்டணம் கிடையாது. எனவே, வாடிக்கையாளா்கள், பரோடா வங்கிக் கிளைகளில் தங்க நகைக் கடன் துரிதமாகவும், இலகுவாகவும் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT