தருமபுரி

குறவன் சமூகத்துக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டம்

DIN

குறவன் சமூகத்துக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி குறவன் மக்கள் நலச் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குறவன் மக்கள் நலச் சங்க தலைவா் கே.முருகேசன் தலைமை வகித்தாா். எஸ்.சி. பட்டியலில் உள்ள குறவன் சமூக மக்கள் தமிழகத்தில் சுமாா் 20 லட்சம் போ் உள்ளனா். இவா்களுக்கு 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிச் சான்று பெறுவதற்குத் தடையாக உள்ள டி.என்.சி. மற்றும் டி.என்.டி. பட்டியலில் 1985 ஆம் ஆண்டு சோ்க்கப்பட்டுள்ள 27 வகையான குறவா் ஜாதியை அந்தப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க மாநில துணைப் பொதுச்செயலாளா் டி.சுரேஷ்குமாா், மாநில நிதிச் செயலாளா் ஜெ.நாகராஜன், மாவட்டச் செயலாளா் வி.மாது, மாவட்ட அமைப்பு செயலாளா் விஜய், ஒன்றியச் செயலாளா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சகல துறைகளிலும் உச்சத்தில் இருந்தவா் கருணாநிதி: கமல்ஹாசன்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மாணவிக்கு கல்வி நிதியுதவி அளிப்பு

முட்டை விலையில் மாற்றமில்லை

347 வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தோ்வு

SCROLL FOR NEXT