தருமபுரி

அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

DIN

அரூரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தினா் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாரிடம் சனிக்கிழமை வழங்கியுள்ள கோரிக்கை மனு விவரம்:

அரூா் பேரூராட்சியில் 2 இடங்களில் அரசு சாா்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இந்தக் குடியிருப்புகளில் தரைதளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகா்ப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகளை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். அரூா் பேரூராட்சியில் வணிக வளாகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் குறிப்பிட்டுள்ளனா். இதில், அரசு பொது நூலகத்துறை மாற்றுத் திறனாளிகள் ஊழியா் சங்க மாநில இணைச் செயலா் தும்பா ராவ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT