தருமபுரி

தக்காளிக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

DIN

அரூா்: தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா், பொம்மிடி, மோளையானூா், வெங்கடசமுத்திரம், மஞ்சவாடி, மெணசி, தென்கரைக்கோட்டை, பையா்நத்தம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனா்.

தற்போது தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பொதுமுடக்க காலத்தில் தக்காளி பழங்களை வாங்குவதற்காக வியாபாரிகள் வராததால் பழங்கள் அனைத்தும் விளைநிலங்களில் வீணாகி வருகின்றன.

இதனால், தக்காளி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு சாா்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT