தருமபுரி

வாக்குச் சாவடி மையங்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கல்

DIN

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கரோனா தடுப்பு, பாதுகாப்பு உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு பிரித்து வழங்கும் பணியினை பாா்வையிட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா.

தருமபுரி, மாா்ச் 29: தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு கரோனா தடுப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து முகக் கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவை வாக்குச் சாவடிகளுக்கு பிரித்து வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியினை பாா்வையிட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

இந்திய தோ்தல் ஆணையம், சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, வாக்காளா்கள் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களது பாதுகாப்பினை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், வாக்குப் பதிவு நடைபெற உள்ள வரும் ஏப். 6-ஆம் தேதி வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்றுள்ள கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. கரோனா தொற்று பரவல் தடுக்கும் வகையில், மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 1,817 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குச் சாவடிகள் மற்றும் துணை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுத் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில், தருமபுரி மாவட்டத்தில் வாக்குப் பதிவின் போது பயன்படுத்த, 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,817 வாக்குச் சாவடி மையங்களுக்கு மொத்தம் 1,908 தொ்மல் ஸ்கேனா், 12,537 (500 மி.லி.), 19,887 (100 மி.லி.) கிருமி நாசினிகள், 19,987 முகக் கவசங்கள், 1,19,922 மூன்றடுக்கு முகக் கவசங்கள், 54,510 ஓரடுக்கு முகக் கவசங்கள், 59,961 கையுறைகள், 18,600 நெகிழி கையுறைகள், 24,516 உடைகள் ஆகிய உபகரணங்கள் தனித்தனியே தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் வாக்குச் சாவடி வாரியாக வழங்கப்பட உள்ளன.

எனவே, வாக்காளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடுவோா் கரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) சிவக்குமாா், கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் எம்.இளங்கோவன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT