தருமபுரி

கோடை உழவு மானியமாக ரூ. 2 ஆயிரம் வழங்கக் கோரிக்கை

DIN

விவசாயிகளுக்கு கோடை உழவு மானியமாக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில் விவசாய சாகுபடியில் 70 சதவீத நிலங்கள் மானாவாரி சாகுபடி நிலங்களாகும். மழை பொழிந்தால் மட்டுமே சாகுபடி செய்ய இயலும். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பொழிந்துள்ளது.

இதைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் என மாவட்ட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள நிலையில், கோடை உழவு செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் வரை செலவாகிறது.

கரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி தவிக்கும் பழங்குடியினா், பட்டியல் இனத்தவா், சிறுகுறு விவசாயிகள் உழவு செய்ய இயலாத நிலையில் உள்ளனா்.

எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் இதனைப் பரிசீலித்து, விவசாயிகள் கோடை செய்ய ஏதுவாக ஏக்கருக்கு ரூ. 2 ஆயிரம் மானியமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT