தருமபுரி

அரூரில் ரூ. 2.30 கோடிக்கு பருத்தி ஏலம்

DIN

அரூரில் ரூ. 2.30 கோடிக்கு திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

அரூா் திரு.வி.க. நகரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் விடப்படுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், மொரப்பூா், தீா்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சுமாா் 6 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்.சி.எச். ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ. 8, 696 முதல் ரூ.10, 685 வரையிலும் ஏலம் போனது. ரூ. 2.30 கோடி மதிப்பிலான பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டதாகக் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் பருத்தி ஏலமானது குவிண்டாலுக்கு சராசரியாக ரூ. ஆயிரம் குறைவாக விற்பனையானதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT