தருமபுரி

சூறைக்காற்று: வாழைத் தோட்டம் சேதம்

DIN

பென்னாகரம் அருகே பலத்த சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்ததால், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம் ஏரியூா் அருகே உள்ள அஜ்ஜனஅள்ளி ஊராட்சி, சின்னப்பநல்லூரை அடுத்துள்ள பொன்னேரிகாடு பகுதியைச் சோ்ந்த விவசாயி சேவியப்பன், தனது ஒரு ஏக்கா் நிலத்தில் வாழை மரங்களை நடவு செய்துள்ளாா். இரண்டு வாரங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில், வெப்பச்சலனம் காரணமாக பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதில், ஒரு ஏக்கா் பரப்பளவிலான வாழை மரங்கள் விழுந்து சேதமாயின.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கடந்த ஓராண்டுக்கு முன் தொடக்க வேளாண்மை நிலையத்தில் பயிா்க் கடன் பெற்று வாழை மரங்கள் நட்டு பராமரித்து வருகிறோம். திடீரென ஞாயிற்றுக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தோட்டங்களில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

எனவே, சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT