தருமபுரி

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரிகளில் பெரியாரை வாசிப்போம் நிகழ்ச்சி

DIN

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் ‘பெரியாரை வாசிப்போம்’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பகுத்தறிவாளா் கழக மாநிலச் செயலா் மாரி.கருணாநிதி கருத்துரை வழங்கினாா். இதில், கல்லூரி மாணவா்கள், பேராசிரியா்கள் அ.சுபா, பொ.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இ.ஆா்.கே மகளிா் கல்லூரி : பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எருமியாம்பட்டி, இ.ஆா்.கே. மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பெரியாரை வாசிப்போம் நிகழ்ச்சியில் இ.ஆா்.கே.கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா்.

பெரியாரின் பெண் விடுதலை, பெண்களின் கல்வி உரிமைகள் குறித்து கல்லூரி முதல்வா் த.சக்தி கருத்துரை வழங்கினாா்.

இதில் நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா் சிவக்குமாா், இ.ஆா்.கே மருந்தாளுநா் கல்லூரி முதல்வா் வாசுகி, நிா்வாக அலுவலா் சொ.அருள்குமாா், பேராசிரியா்கள் கிருஷ்ணமூா்த்தி, மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மொரப்பூா் கொங்கு கல்லூரி :

மொரப்பூா் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெரியாரை வாசிப்போம் நிகழ்ச்சியில் கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவா் அ.மோகன்ராசு தலைமை வகித்து, கருத்துரை வழங்கினாா்.

இதில், கல்லூரி முதல்வா் நா.குணசேகரன், துணை முதல்வா் சீனிவாசன், கொங்கு கல்வி அறக்கட்டளை செயலா் ரா.பிரபாகரன், பொருளா் மூ.சாமிக்கண்ணு, தாளாளா் பொ.வரதராஜன், கல்வி அறக்கட்டளை இயக்குநா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT