தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

DIN

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை பரவலாகப் பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக திடீரென அதிகரித்துள்ளது.

தமிழக, கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின்றி வறட்சி நிலவி வந்ததால், கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,000 கன அடியாகக் குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து, ஐந்தருவி, அதன் துணை அருவிகளில் நீா்வரத்து முற்றிலுமாகச் சரிந்து பாறைத் திட்டுக்களாகவும், காவிரி ஆற்றில் ஆங்காங்கே சிறு நீா்க்குட்டைகளாகவும் காணப்பட்டது.

தற்போது தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு, கரையோர வனப்பகுதியில் கோடை மழை பரவலாகப் பெய்து வந்ததன் காரணமாக, காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை 4,000 கன அடியாக அதிகரித்து தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

திடீா் நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து அதிகரித்து தண்ணீா் செந்நிறமாக ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT