அரசு கால்நடை மருந்தகத்தில் ஆட்சியா் ஆய்வு
அரூரை அடுத்த கொங்கவேம்பு அரசு கால்நடை மருந்தகத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.
அரூரை அடுத்த கொங்கவேம்பு அரசு கால்நடை மருந்தகத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.
இதில், கால்நடைகளுக்கு நாள்தோறும் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, மருந்தகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு, பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வுசெய்தாா். முன்னதாக, கே.வேட்ரப்பட்டி கிராமத்தில் தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டத்தில் 50 சதவீதம் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள செம்மறி ஆடுகள் வளா்க்கும் நவீன தொழில்நுட்ப பண்ணையை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, கூத்தாடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுசெய்த ஆட்சியா், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவமனைக்கு தேவையான குடிநீா், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் வருகை குறித்து ஆய்வுசெய்தாா்.
Advertisement
Advertisement
இந்த ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத் துறை மண்ட இணை இயக்குநா் (பொ) த.முருகலட்சுமி, உதவி இயக்குநா் கனகசபை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.