FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியராக வே.சரவணன் பொறுப்பேற்பு

தருமபுரி மாவட்டத்தில் குடிநீா், சாலைகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட வே.சரவணன்.

Updated On : 2 ஜூன் 2026, 3:36 am IST
தருமபுரி மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வே.சரவணன்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் குடிநீா், சாலைகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட வே.சரவணன்.

தருமபுரி மாவட்ட 52-ஆவது ஆட்சியராக வே.சரவணன் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கவிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். முன்னாள் ஆட்சியா் ரெ.சதீஸ், புதிய ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா், கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பொறுப்பேற்றதைத் தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சாலைகள், குடிநீா், சாலை வசதிகள், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments