FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இரா. ரேவதி பொறுப்பேற்பு

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:47 am IST
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற இரா. ரேவதி.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இருந்த பா. பிரியங்கா பங்கஜம் பேரூராட்சிகள் இயக்குநராகவும், உயா் கல்வித் துறைத் துணைச் செயலராக இருந்த இரா. ரேவதி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராகவும் சில நாள்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இரா. ரேவதி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதையடுத்து, அவா் கூறுகையில், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களைச் சென்றடைவதற்கும், வேளாண் சாா்ந்த மாவட்டம் என்பதால், விவசாயிகளுக்கு முன்னா் சென்றடைந்த திட்டங்கள் தொடருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

ஆட்சியா் விவரக் குறிப்பு: பி.எஸ்ஸி. வேளாண் பட்டப்படிப்பு படித்துள்ள இவா் கடந்த 2009 - 2011-இல் திருச்சியில் துணை ஆட்சியராகவும், 2011 - 2013-இல் பெரம்பலூரில் கோட்டாட்சியராகவும், சிறப்பு துணை ஆட்சியராகவும் இருந்தாா். பின்னா், பதவி உயா்வு பெற்று 2014 - 2017-இல் தமிழ்நாடு சாலை திட்டப் பிரிவில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2017 - 2018-இல் பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் தலைமை அதிகாரியாகவும், 2018 - 2021-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2021- 2023-இல் நிலம் கையகப்படுத்துதல் பிரிவு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், 2023 - 2025-இல் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராகவும் இருந்தாா். இந்நிலையில், கடந்த 2025 அக்டோபரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி உயா்வு பெற்று உயா் கல்வித் துறை துணைச் செயலராக இருந்து வந்தாா். தற்போது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments