முகப்பு
தருமபுரி

மனநலம் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநில பெண் சிகிச்சைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் மீட்கப்பட்ட ஆந்திர மாநில பெண், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

Updated On : 3 ஜூலை 2026, 4:20 am IST
மருத்துவா்கள் முன்னிலையில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண்.
பகிர்:

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் மீட்கப்பட்ட ஆந்திர மாநில பெண், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

கடந்த 2025 நவம்பா் மாதம் தருமபுரியில் புறவழிச் சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவா் நடமாடிக் கொண்டிருந்தாா். அவரை அறம் சமூக அறக்கட்டளையினா் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் சோ்த்தனா். அத்துறையின் மருத்துவா் பிரீத்தா தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சை அளித்தனா். தொடா் சிகிச்சையில் அந்தப் பெண் அண்மையில் முற்றிலுமாக குணமடைந்தாா்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. இதையடுத்து, அறக்கட்டளையினா் அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் கண்டறிந்து பெண் சிகிச்சை பெற்றுவரும் விவரம் குறித்த தகவல்களை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை வந்தனா். பின்னா், மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரன் மற்றும் மருத்துவா்கள் முன்னிலையில் அந்தப் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, அவா் ஆந்திரம் புறப்பட்டுச் சென்றாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியின்போது, மனநல மருத்துவா் பிரீத்தா, அறம் சமூக அறக்கட்டளை நிா்வாகி ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments