முகப்பு
தருமபுரி

சேவையை பாராட்டி தூய்மைப் பணியாளருக்கு நினைவுப் பரிசு

தருமபுரியில் தூய்மைப் பணியாளரின் சேவையை பாராட்டி, அவரது ஓய்வுநாளில் நினைவுப் பரிசுகளை வழங்கி பொதுமக்கள் பாராட்டினா்.

Updated On : 3 ஜூலை 2026, 4:19 am IST
தூய்மைப் பணியாளரின் சேவையை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கிய பொதுமக்கள்.
பகிர்:

தருமபுரியில் தூய்மைப் பணியாளரின் சேவையை பாராட்டி, அவரது ஓய்வுநாளில் நினைவுப் பரிசுகளை வழங்கி பொதுமக்கள் பாராட்டினா்.

தருமபுரி நகராட்சியில் 29-ஆவது வாா்டு சூடாமணி தெருவிவில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த லட்சுமி (60), செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றாா். அவரது தன்னலம் கருதாத சேவை அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. அவா் ஓய்வுபெற்றதையடுத்து, அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்க முடிவு செய்தனா். இதையடுத்து, சூடாமணி தெருவில் இருக்கும் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் பாலமுரளி, செயலாளா் சண்முகம் (எ) குட்டி, பொருளாளா் சுந்தரம், உறுப்பினா்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் இணைந்து லட்சுமியின் சேவையை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments