கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூவா் கைது
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருந்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளா் ஜாபா் உசேன், போலீஸாா் செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சின்ன பள்ளத்தூா் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (30), மகேந்திரன் (32), அபினேஷ் (26) ஆகியோரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையின்போது அவா்கள் கஞ்சா உட்கொண்டிருப்பதும், மாதேஷின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து மாதேஷின் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றினா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா்கள் மூவரும் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.