முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 2 ஜூன் 2026, 3:56 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரியில் அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மேக்லாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிம்மன் (25). பெங்களூரில் தச்சுத்தொழில் செய்து வந்த இவருக்கு திருமணமாகவில்லை.

வாரவிடுமுறையையொட்டி, சனிக்கிழமை மாலை பெங்களூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் தருமபுரிக்கு புறப்பட்டுள்ளாா். இரவு சுமாா் 10 மணி அளவில் தருமபுரி - பாலக்கோடு சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே வந்தபோது, அவ்வழியே சென்ற அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்தாா்.

Advertisement

Advertisement

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் நரசிம்மன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். புகாரின்பேரில், பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.