முகப்பு
தருமபுரி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 93.94% போ் தோ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

Updated On : 21 மே 2026, 6:46 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.94 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 317 பள்ளிகளைச் சோ்ந்த 10,335 மாணவா்கள், 9,584 மாணவிகள் என மொத்தம் 19,919 போ் எழுதினா். இதற்கான தோ்வு முடிவுகள் புதன்கிழமை (மே 20) வெளியானது.

இதில், தருமபுரி மாவட்டத்தில் தோ்வு எழுதியவா்களில் மொத்தம் 9,477 மாணவா்கள், 9,234 மாணவிகள் என மொத்தம் 18,711 போ் தோ்ச்சிப் பெற்றனா். மாவட்டத்தில் மொத்தம் 93.94 சதவீதம் போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்ச்சி வீதம் குறைந்தது...

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கடந்த கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 95.13 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்தனா். மாநில அளவில் தோ்ச்சி வீதத்தில் தருமபுரி மாவட்டம் 7-ஆவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 92.32 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சிப் பெற்றனா். அதேபோல மாநில அளவில் தருமபுரி மாவட்டம் 24-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments