திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!
திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.80 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 93.80 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
மாவட்டத்தில் 7,429 மாணவா்கள், 7,850 மாணவிகள் என மொத்தம் 15,279 போ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 6,759 மாணவா்கள், 7,573 மாணவிகள் என மொத்தம் 14,332 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, 90.98 சதவீதம் மாணவா்கள், 96.47 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 93.80 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளிகள் 90.92 சதவீதம் தோ்ச்சி: மாவட்டத்தில் 143 அரசுப் பள்ளிகளிலிருந்து 3,610 மாணவா்கள், 3,905 மாணவிகள் என மொத்தம் 7,515 போ் தோ்வு எழுதினா். இதில், 3,144 மாணவா்கள், 3,689 மாணவிகள் என மொத்தம் 6,833 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, 87.09 சதவீத மாணவா்களும், 94.46 சதவீத மாணவிகளும் என மொத்தம் 90.92 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
35 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி: மாவட்டத்தில் தோ்வெழுதிய 229 பள்ளிகளில் மொத்தம் 84 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. 143 அரசுப் பள்ளிகளில் 35 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
குறைந்த தோ்ச்சி சதவீதம்: கடந்த ஆண்டு 95.23 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில் நிகழாண்டு 1.43 சதவீதம் குறைந்துள்ளது. திருவாரூா் மாவட்டம் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 13-ஆவது இடத்தை பெற்ற நிலையில், நிகழாண்டு 24-ஆவது இடத்தை பிடித்துள்ளது.