கிருஷ்ணகிரி

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் சாலை மறியல்

DIN

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். 
ஒசூரை அடுத்த முத்தாலியைச் சேர்ந்தவர் ஆனந்த். லாரி ஓட்டுநரான இவரது மகள் தீபா (22). இவருக்கும், ஒசூர் அலசநத்தம் வெங்கடேஷ் நகரை சேர்ந்த சீனப்பா மகன் நவீன்( 33), என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம்  தேதி திருமணம் நடந்தது.
கடந்த நவம்பரில் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபாவுக்கு பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்குள் இறந்தது. இந்த நிலையில், தீபாவை அவரது மாமனார், மாமியார் அழைத்து செல்லவில்லை.மேலும், அவரது கணவர் நவீனையும் சந்திக்க முடியவில்லையாம்.
ஒசூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தீபா அளித்த புகாரின் பேரில், தீபாவுடன் சேர்ந்து வாழ்வதாக நவீன் கூறியுள்ளார். ஆனால், கணவர் வீட்டுக்குச் சென்ற தீபாவை உள்ளே வரவிடாமல் கதவை பூட்டிவிட்டனராம்.
இதனால் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட தீபா,  அலசநத்தம் சாலையில் உறவினர்களுடன் மறியல் போராட்டம் நடத்தினார். தகவலறிந்து வந்த அட்கோ காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீஸார், தீபாவை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT