இரு தரப்பினரிடையே மோதல்: விவசாயி சாவு
வேலம்பட்டி அருகே நிலத்தில் மண் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி உயிரிழந்தார்.
வேலம்பட்டி அருகே நிலத்தில் மண் அள்ளுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி உயிரிழந்தார்.
வேலம்பட்டி அருகேயுள்ள செலப்பசனாம்பட்டியைச் சேர்ந்த சக்கரவர்த்திக்கும் (60), அவரது தம்பி மகன்களுக்கும் இடையே நிலத்தில் மண் அள்ளுவது குறித்து முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் கால் தவறி அங்கிருந்த கடப்பாரை மீது விழந்த சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார்.
காவல் ஆய்வாளர் கபிலன், நாகரசம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராசன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரது தம்பி மகன்கள் ராஜசேகர், சுரேஷை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.