கிருஷ்ணகிரி

காரில் காஸ் கசிந்து கல்லூரி மாணவர் சாவு

DIN


ஒசூரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய காரில் ஏற்றி சென்ற கார்பன் மோனாக்ஸைடு நிரப்பிய சிலிண்டரிலிருந்து காஸ் கசிந்ததில் கல்லூரி மாணவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
ஒசூர் ஸ்ரீ நகர் பகுதியைச் சேர்ந்த அரிநாத் மகன் ரக்ஷித் (21). இவர் திருச்சியில் உள்ள என்ஐடி கல்லூரி ஒன்றில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்தார். இவர் சனிக்கிழமை கல்வி சம்பந்தமான செயல்முறை ஆய்வுக்காக தனது காரில் கார்பன் மோனாக்சைடு நிரப்பப்பட்ட சிலிண்டரை ஏற்றி கொண்டு பெங்களூரில் இருந்து சனிக்கிழமை ஒசூர் நோக்கி வந்தார். ஒசூர் உள் வட்டச்சாலை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்த கார்பன் மோனாக்ஸைடு கசிந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ரக்ஷித் உயிரிழந்தார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் ரக்ஷித்தை அவரது பெற்றோர் தேடினர். அவரது செல்லிடப்பேசி எண்ணை கொண்டு அவரைத் தேடிய போது, ஒசூர் உள்வட்டச்சாலை பகுதியில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து, கார் நின்றிருந்த இடத்துக்குச் சென்று காரின் கதவை திறந்த போது ரக்ஷித் இறந்து கிடப்பதை கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT