ஆதிபராசக்தி மன்ற இருமுடி விழா
அரூர் மேல்பாட்சாபேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் முதலாமாண்டு இருமுடி விழா அண்மையில்நடைபெற்றது.
அரூர் மேல்பாட்சாபேட்டையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் முதலாமாண்டு இருமுடி விழா அண்மையில்
நடைபெற்றது.
விழாவில், தருமபுரி ஓம்சக்தி மன்றத்தின் பொறுப்பாளர் சுந்தரி செல்லையா தலைமை வகித்து ஆன்மிக உரை நிகழ்த்தினார்.
விழா குழுவினர் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, எழுதுப் பொருள்கள், புடவைகள் உள்ளிட்ட துணிகளை வழங்கினர். தொடர்ந்து, ஓம் சக்தி அம்மன் ஊர்வலம் அரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில், 200-க்கும் அதிகமான ஓம் சக்தி பக்தர்கள் பங்கேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு இருமுடியுடன் சென்றனர்.