ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா
போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம்
போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சார்நிலைக் கருவூல அலுவலர் கோபிநாத் தலைமை வகித்தார். கொடமாண்டப்பட்டி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் சிங்காரவேல், சின்னசாமி, பரணி, தலைமை ஆசிரியர்கள் சரவணன், ஜெயவேல், ஜெகதீஷ்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்து, இத்திட்டம் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். கணக்காளர் சூர்ய மாதவன் நன்றி கூறினார்.