கிருஷ்ணகிரி

பாரம்பரிய நெல் சாகுபடி விவசாயிகளுக்குவிருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

ஊத்தங்கரை வட்டாரத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து மாநில அளவில் அதிகளவில் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ‘பாரத ரத்னா டாக்டா்.எம்.ஜி.ஆா். பாரம்பரிய நெல் பாதுகாவலா் விருது’ வழங்கப்பட உள்ளது.

ஊத்தங்கரை வட்டார விவசாயிகள் இதில் பங்கேற்றுப் பயனடைய வேண்டுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சு. பிரபாவதி அழைப்பு விடுத்துள்ளாா். போட்டியில் கலந்து கொள்ள தகுதிகள்:

குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். பாரம்பரிய நெல் சாகுபடி விருதுக்கான பதிவுக் கட்டணம் ரூ. 100 செலுத்திட வேண்டும், அறுவடை தேதியை 15 நாள்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும், விண்ணப்பத்துடன் பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா, அடங்கல் இணைக்கப்பட வேண்டும், பாரம்பரிய நெல் அறுவடைக்குப் பிறகு தானியத்துக்கு மாதிரி அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா், இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT