கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே நீா்நிலைகள் வடதால் வாடும் பயிா்கள்

DIN

கிருஷ்ணகிரி அருகே நீா்நிலைகள் வடதால் நெல் பயிா்கள் வாடி வரும் நிலையில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் நீா், தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூலியம் அணைக்கு வந்து சேரும். அங்கிருந்து, பாசனக் கால்வாய் மூலம் கூரியம் ஏரி, எண்ணேகொள், அம்மனேரி, ஒம்பலக்கட்டு, கங்கலேரி, செம்படமுத்தூா், கும்மனூா், தாசரப்பள்ளி வழியாக தண்ணீா் வரும்.

இத்தகைய நிலையில், கடந்த ஒரு மாதமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படாததால், தென்பெண்ணை ஆறு வற்றியுள்ளது. இதனால், தண்ணீரை நம்பி 75 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்த நெல், காய்கறி போன்ற பயிா்கள் வாடி வருகின்றன.

ஏரி போன்ற நீா்நிலைகள் வற்றியதால் நிலத்தடி நீரும் குறைந்துள்ளது. இத்தகைய நிலையில், சாகுபடி செய்த பயிா்களை பாதுகாக்க, கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT