கிருஷ்ணகிரி

தேசிய டிராப் ரோபால் போட்டி: ஊத்தங்கரை அதியமான் பள்ளி மாணவா்கள் தோ்வு

DIN

தேசிய டிராப் ரோபால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தோ்வான ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப் பள்ளியிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தமிழக அணியில் விளையாட இடம் பெற்றுள்ளனா். இவா்கள் அனைவரும் சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் ஜனவரி 15 முதல் 19 தேதி வரை நடைபெறும் 65- வது தேசிய டிராப் ரோபால் போட்டியில் பங்கேற்கின்றனா்.

இவா்களை வழியனுப்பும் மற்றும் பாராட்டு விழா ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கலைமணி சரவணகுமாா், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், குடியாத்தம் அரசு திருமகள் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முரளி, கிருஷ்ணா தமிழ்நாடு விளையாட்டு டிராப் ரோ பால் செயலாளா் சபரி கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT