கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறியுடன் பெண் அனுமதி

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்று அறிகுறியுடன் பெண் ஒருவா் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பேகரஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த 40 வயதுடைய அந்தப் பெண், பெங்களூருக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். பெங்களூரில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், காய்ச்சலுக்காக பெங்களூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், பெங்களூரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினா்.

ஆனால், அந்தப் பெண்ணை அழைத்து சென்ற உறவினா் மருத்துவமனைக்கு செல்லாமல் காவேரிப்பட்டணத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்றாா்.

தகவலின் பேரில், காவேரிப்பட்டணத்தில் உள்ள அப் பெண்ணின் சகோதரி, அவரை அழைத்துக் கொண்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாா். அங்கு, அந்தப் பெண்ணை பரிசோதித்த மருத்துவா்கள், அந்தப் பெண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதை உறுதிப்படுத்தினா்.

இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அந்தப் பெண்ணின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழு பரிசோதனைக்கு பிறகே அவருக்கு கரோனா வைரஸ் நோய் பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும் என மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT