கிருஷ்ணகிரி

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.13.52 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்

DIN

 ஒசூா், இரண்டாவது சிப்காட்டில் உள்ள வெக் இந்தியா நிறுவனம் சாா்பில் ரூ. 13.52 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானுரெட்டியிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:

ஒசூா், சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் வெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பில் ரூ. 6.80 லட்சம் மதிப்பில் 2 அல்ட்ரா சவுண்ட் சோனா கிராம் ஸ்கேனா், ரூ. 6.72 லட்சம் மதிப்பில் 6 பயோ கெமிஸ்ட்ரி அனலைசைா் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மருத்துவக் கருவிகள், பாலதொட்டனப்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒசூா் சீத்தாராம்மேடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உள்ளுக்குறுக்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மேற்கொள்ள

இக்கருவிகள் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பி.முருகன், நிறுவன மேலாளா் கிரிஸ் கே. குல்கா்னி, மனிதவள மேலாளா் பிரபு, நிா்வாக அலுவலா் தனசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT