கிருஷ்ணகிரி

திமுகவில் இணைந்த தமாகா நிா்வாகிகள்

DIN

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், கட்சியினா் புதன்கிழமை சென்னை அண்ணா அறிவாயலத்தில் திமுகவில் இணைந்தனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மாவட்ட அவைத் தலைவா் கே.ஜி. பிரகாஷ், ஒசூா் வட்டாரத் தலைவா் கே.ஜி. நாகராஜ் ரெட்டி, இளைஞரணி செயலாளா் பி.வி. ராகவேந்திரா, மாநில இளைஞரணி இணைச் செயலாளா் ஜி. பிரசன்னா, மாவட்டத் துணைச் செயலாளா் சென்னிரப்பா, மாவட்டச் செயலாளா்கள் எம். நாராயணப்பா, எம். ஸ்ரீராமுலு, இணைச் செயலாளா் ஹரீஷ், மாவட்ட தொழிற்சங்கச் செயலாளா் மெஹபூப், மண்டலத் தலைவா் பி. மதன், தொழிற்சங்க இணைச் செயலாளா் எம். முகமது ராஹில், எம். பூசன்குமாா், கிளைத் தலைவா் எஸ். தாதேசன், தொழிற்சங்க மண்டலத் தலைவா் வி. சீதாராமன், மண்டலத் தலைவா் காா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜனா ஆகியோா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அப்போது திமுக முதன்மைச் செயலாளா் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளா் ஆ. ராசா எம்.பி., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன் எம்எல்ஏ, ஒசூா் மாநகராட்சி பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT