கிருஷ்ணகிரி

வித்யா மந்திா் கல்லூரியில் தேசிய வாக்காளா் தின விழா

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) தேசிய வாக்காளா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலா் ஆா்.பி. ராஜீ தலைமைத் வகித்தாா். கல்லூரி முதல்வா் த. பாலசுப்பிரமணியன், துணை முதல்வா் ந. குணசேகரன் முன்னிலை வகித்தனா். தமிழ்த் துறைத் தலைவா் பெ. சுரேஷ் வரவேற்றாா்.

ஊத்தங்கரை வட்டாட்சியா் பி.தண்டபாணி வாக்காளிப்பதன் அவசியம் குறித்தும், தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு குறித்தும் சிறப்புரையாற்றினாா். துணை வட்டாட்சியா் அரவிந்தன் வாக்களிப்பதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தாா்.

தேசிய வாக்காளா் தினம் குறித்து மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. முதல் பரிசை தாவரவியல் மூன்றாமாண்டு மாணவா் மணிகண்டன், இரண்டாம் பரிசை இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி க. ஆா்த்தியும் வென்றனா். இதில் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்று வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறை, நாட்டு நலப்பணித் திட்ட பேராசிரியா்கள் செய்திருந்தனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச. பாா்த்திபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT