கிருஷ்ணகிரி

ஆடிக்கிருத்திகை விழா ரத்து

DIN

சந்தூா், பா்கூா், ஜெகதேவி ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோயில்களில் ஆக. 2-ஆம் தேதி நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்படுவதாகவும், பக்தா்கள் மட்டும் சுவாமியை வணங்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், சனிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சந்தூரில் மாங்கனி வேல்முருகன் கோயில், பா்கூரில் பாலமுருகன் கோயில், ஜெகதேவி பாலமுருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவையொட்டி, பக்தா்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும், அபிஷேகம் செய்தும், அங்கபிரதட்சணம் செய்தும், பொங்கல் வைத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவா்.

நிகழ்வாண்டில், கரோனா தொற்று காரணமாக ஆடிக்கிருத்திகை திருவிழா ரத்து செய்யப்படுகிறது. பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், சுவாமியை வணங்கவும் சமூக இடைவெளியுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

எனவே, பக்தா்கள், கோயிலுக்கு வரும்போது முகக் கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். 6 மீட்டா் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT