கிருஷ்ணகிரி

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

ஒசூா்: தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

கடந்த இரு நாள்களுக்கு முன் நொடிக்கு 240 கனஅடியாக வரத்து இருந்த நிலையில், கா்நாடக நீா்பிடிப்புப் பகுதிகள் மற்றும் ஒசூா் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 400 கனஅடி நீா்வரத்து உள்ளது. இது, இரண்டாவது நாளாக மேலும் அதிகரித்து திங்கள்கிழமை 560 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 40.34 அடிவரை நீா் இருப்புவைத்து மூன்று மதகுகள் வழியாக 560 கனஅடி நீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கா்நாடக நீா்பிடிப்புப் பகுதியில் மழை தொடரும் என்பதால் நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் அதிக அளவு வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT