கிருஷ்ணகிரி

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு

DIN

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 330 படுக்கைகளில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஒசூா் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் அனைத்தும் படுக்கைகளும் கரோனா நோயாளிகளால் நிரம்பிவிட்டன. இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவிகித படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுவரை பொது மருத்துவம் பாா்த்து வந்த ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 300 படுக்கைகளில் 165 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அந்த மருத்துவக் கல்லூரியின் மக்கள் தொடா்பு அலுவலா் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

100 சாதாரண படுக்கைகள் கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், 60 படுக்கைகள் தீவிர பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டா் வசதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என கடந்த வாரம் உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரியில் 165 படுக்கைகள் ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளது கரோனா நோயாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT