கிருஷ்ணகிரி

ஒசூரில் அரசு அதிகாரி வீட்டிலிருந்து ரூ.2.27 கோடி பறிமுதல்

DIN

ஒசூரில் அரசு அதிகாரியின் வீட்டில் நடந்த சோதனையில் ரூ.2.25 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒசூர் நேரு நகரில் வசித்து வருபவர் C.N.ஷோபனா. இவர் வேலூர் மண்டல பொதுப் பணித் துறையில் தொழில்நுட்ப கல்வி, வேலூர் மண்டல செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய் இரவு ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும்போது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒசூரில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ.2 கோடியே 27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் ஒரு லாக்கர் சாவி, 7 சொத்து ஆவணங்கள், 38 சவரன் நகை, ஒரு 1.3 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

செயற்பொறியாளர் ஷோபனா தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் கட்டடங்கள் அனுமதி அளிப்பது தொடர்பாக லஞ்சம் பெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு அழுத்தம்

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

உதவி பேராசிரியா் தகுதித் தோ்வு பயிற்சி வகுப்பு

காவிரி ஆணைய தீா்மான நகல் எரிப்பு போராட்டம்

பாஜக நாகரிக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும்: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT