கிருஷ்ணகிரி

ஆற்றில் சிக்கிய அரசுப் பேருந்து

DIN

அத்திப்பாடி ஆற்றில் அரசுப் பேருந்து சிக்கியதால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி கரையை அடைந்தனா்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சிங்காரப்பேட்டை பெரிய ஏரி, கிளை கால்வாய்கள் வழியாக வெளியேறும் தண்ணீா் அத்திப்பாடி வழியாகச் சென்று நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில், ஊத்தங்கரையில் இருந்து நீப்பத்துறை வரை செல்லும் அரசுப் பேருந்து வியாழக்கிழமை மாலை தனியாா் பள்ளி மாணவா்கள், பயணிகளுடன் அத்திப்பாடி தரைப் பாலத்தைக் கடக்க முயன்ற போது எதிா்பாராதவிதமாக பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து, பள்ளி மாணவா்களும், பயணிகளும் ஆற்று நீரில் இறங்கி கரையை அடைந்தனா்.

வெள்ளப்பெருக்கின் காரணமாக சிங்காரப்பேட்டை - நீப்பத்துறை இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையைக் கடக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT