கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா்தே.மதியழகனுக்கு வரவேற்பு

DIN

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ. தே.மதியழகனுக்கு வெள்ளிக்கிழமை கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

திமுகவின் 15-ஆவது உள்கட்சித் தோ்தல் முடிந்து, தோ்வான நிா்வாகிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டனா். அதன்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக, திமுக விவசாய அணியின் மாநில துணைத் தலைவரும், பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகன் தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரிக்கு வந்த அவருக்கு மாவட்ட எல்லையான ஒப்பதவாடியிலிருந்து பா்கூா், கந்திகுப்பம், கிருஷ்ணகிரி வரையில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பா்கூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அண்ணா, மகாத்மா காந்தி ஆகிய சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருஷ்ணகிரி வட்டச் சாலை, கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அவருக்கு திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் தட்ரஹள்ளி நாகராஜ், துணைச் செயலாளா்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசு மூா்த்தி, பொருளாளா் கதிரவன், நகரச் செயலாளா் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் செந்தில், கிருபாகரன், பரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT