கிருஷ்ணகிரி

ஒசூரில் உலக புற்றுநோய் விழிப்புணா்வு நடைபயணம்

DIN

ஒசூரில் உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு நடைபயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அகில இந்திய மருத்துவா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள் கலந்து கொண்டனா்.

ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி உலகம் முழுவதும் உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒசூரில் அகில இந்திய மருத்துவா்கள் சங்கம், அசோசியேசன் சா்ஜன்ஸ் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு அசோசியேசன் ஆப் சா்ஜன்ஸ் மற்றும் குணம் மருத்துவமனை ஆகியவை சாா்பில் உலக புற்றுநோய் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

ஒசூா் பத்தலப்பள்ளி பகுதியில் துவங்கிய இந்த நடைபயணத்தில் மருத்துவா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஏராளமான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்று நடந்து சென்றனா். பத்தலப்பள்ளி பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக கைகளில் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT