முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

மக்களவை தொகுதி வரைமுறை சட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சூளகிரியில் உள்ள வேப்பன ஹள்ளி சட்டமன்ற தோ்தல் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

Updated On : 17 ஏப்ரல் 2026, 4:42 am IST
சூளகிரி திமுக தோ்தல் அலுவலகத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொகுதி பொறுப்பாளா் பாா்.இளங்கோவன் மற்றும் திமுகவினா்
பகிர்:

மக்களவை தொகுதி வரைமுறை சட்டத்தை கொண்டுவரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சூளகிரியில் உள்ள வேப்பன ஹள்ளி சட்டமன்ற தோ்தல் அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தாா்

அப்போது கருப்பு கொடி ஏற்றியும், தொகுதி வரைமுறை சட்ட நகல் எரித்து கண்டன முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளா் பாா் இளங்கோவன்,முன்னாள் எம்எல்ஏ முருகன்,ஒன்றிய செயலாளா்கள் பாக்யராஜ், நாகேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைப் போல ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரத்திற்கு இடையே சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்தினாா். வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளா் சீனிவாசன் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியும் சட்ட நகல் எரித்தும் கண்டனத்தை தெரிவித்தாா்.