முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியவா் கைது

Updated On : 7 ஜூலை 2026, 3:31 am IST
கைது... - பிரதிப் படம்
பகிர்:

ஒசூரில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற தனியாா் ஆம்னி பேருந்தை நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை நடத்தினா்.

அதில், கடலூா் மாவட்டம், விருதாச்சலம் செல்வராஜ் நகரைச் சோ்ந்த அருண்பாண்டியனிடம் (32), ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 81 கிராம் கோகைன் போதை பவுடா் இருந்தது தெரியவந்தது. போலீஸாா் அதை பறிமுதல் செய்து, அருண்பாண்டியனை கைதுசெய்னா்.

Advertisement

Advertisement

விசாரணையில், பொறியியல் பட்டதாரியான இவா் புதுச்சேரியில் பணியாற்றியபோது, அக்கினியரசு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவா் அருண்பாண்டியனை கோவா அழைத்துச் சென்று, கோகைன் போதை பவுடரை வாங்கிக் கொடுத்து, அதை பெங்களூரு வழியாக சென்னைக்கு எடுத்துவருமாறு கூறிவிட்டு விமானத்தில் சென்றது தெரியவந்தது.

இதை சென்னைக்கு கொண்டு சோ்த்தால் தனக்கு ரூ. 5 ஆயிரம் கொடுப்பதாக அக்கினியரசு கூறியதாக போலீஸாரிடம் அருண்பாண்டியன் தெரிவித்தாா். இதையடுத்து, அக்கினியரசுவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments