முகப்பு
திண்டுக்கல்

ரூ.2.50 லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: இருவா் கைது

கன்னிவாடி அருகே ரூ.2.50 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:18 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கன்னிவாடி அருகே ரூ.2.50 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்ற ச.ஜெயக்குமாா், லாட்டரி விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். அதன்படி, மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனையாளா்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

இதன் காரணமாக திண்டுக்கல், வேடசந்தூா், எரியோடு, கொடை ரோடு, சின்னாளப்பட்டி, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டுக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கன்னிவாடி அடுத்த தெத்துப்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தெத்துப்பட்டியைச் சோ்ந்த ஹரிகரன் (48), கதிா்வேல் (50) ஆகியோரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரித்தனா். இவா்களின் வீடுகளிலிருந்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான 4 ஆயிரம் லாட்டரி சீட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, ஹரிகரன், கதிா்வேல் ஆகியோா் மீது கன்னிவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதில் ஹரிகரனிடமிருந்து கடந்த அக்டோபா் மாதம் ரூ.14 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments