நாமக்கல்

ஸ்ரீமரவள்ளிக்கிழங்கின் விலை சரிவு

DIN

மரவள்ளிக்கிழங்கின் விலை சரிவடைந்துள்ளது.
பரமத்தி வேலூர் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.   இவற்றை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜவ்வரிசி- கிழங்கு மாவு தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.  இதுதவிர,   சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகளும் மரவள்ளிக்கிழங்கு வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து,   புள்ளிகள் அடிப்படையில் அதன் விலையை  ஆலை உரிமையாளர்கள்  நிர்ணயம் செய்கின்றனர். 
மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் ஒரு டன் ரூ.9, 500 வரையில் விற்பனையானது.  ஆனால், இந்த வாரம் ரூ.8, 700-க்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கின் வரத்து அதிகமானதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT