நாமக்கல்

கொல்லிமலை அரசு ஐடிஐயில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

தினமணி

பழங்குடியினர் மட்டும் பயிற்சி பெற ஏதுவாக கொல்லிமலையில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கே.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சார பணியாள், பொருத்துநர், டீசல் இன்ஜின் மெக்கானிக், தையல் வேலை தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளிலும் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்ற வைப்பவர் பிரிவிலும் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசால் மாணவ, மாணவியருக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் சீருடையுடன் தையற்கூலி, வரைபடக் கருவிகள், பாடபுத்தகங்கள், கட்டணமில்லா பேருந்து பயண அனுமதி ஆகிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7639079695, 8489555073 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதை சாக்கடை பள்ளத்தால் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞரின் கால் நசுங்கியது

ஆறுமுகனேரி, ஆத்தூா், காயல்பட்டினத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் 30 பவுன் நகைகள், ரூ. 2.லட்சம் திருட்டு

18-ஆவது மக்களவை உறுப்பினா்களுக்கு...

ஆடுகளுக்கு கூறாய்வுச் சான்று கோரி பெண் போராட்டம்

SCROLL FOR NEXT