நாமக்கல்

பள்ளி வாகனங்கள் சோதனை: 60 வாகனங்கள் தகுதி நீக்கம்

DIN

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு செய்யப்பட்டதில் இதுவரை 60 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து எல்லைக்குள்பட்டு 610 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் சிறப்பு வாகன விதிகளின்படி வாகனங்களை தர ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த மே 4-ஆம் தேதி முதல் 4 கட்டங்களாக  வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வருகிறார். இந்த ஆய்வுகளில் மொத்தம் 60 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பழுது நீக்கி ஆய்வுக்கு வந்தால் மீண்டும் தகுதி சான்றிதழ் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT