காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ரயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நாமக்கல் மேற்கு மாவட்ட
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்துக் கட்சியினர் சார்பில் புதன்கிழமை ஆனங்கூரில் ரயில் மறியல் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலரும், பரமத்தி வேலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ரயில் மறியலில், 500 பெண்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து வெப்படையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.